ரசிகர்களுடன் அஜித்… திடீர்னு டிவிட்டரில் வைரலான புகைப்படம்!
அஜித் நடிப்பில் H வினோத் இயக்கி வரும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் ஹெச் வினோத்.
இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி “இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், மொத்த படப்பிடிப்பும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் முடிவடையும்” என்று சொல்லப்படுகிறது. முன்னதாக தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.