செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:27 IST)

நான்கு நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல்… கலக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் நாளுக்குப் பிறகு வேலை நாளான வெள்ளிக் கிழமையில் வசூல் குறைந்த நிலையில் அடுத்து சனிக் கிழமை வசூல் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமையிலும் வசூலில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்நிலையில் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் வசூல் 150 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் இன்றும் படத்துக்கு நல்ல வசூல் இருக்கும் என சொல்லப்படுகிறது.