விவேகம் படத்தில் அஜித்தையே முந்திவிட்டாராம் கருணாகரன்! எப்படி தெரியுமா?
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து இந்த படத்தின் டப்பிங் பணி ஆரம்பமானது.
பொதுவாக ஒரு படத்தின் டப்பிங் தொடங்குவதென்றால் முதலில் அந்த படத்தின் ஹீரோ டப்பிங்கை முடிப்பார். அதன்பின்னர் ஹீரோயின் அல்லது அவருக்கு பதிலாக பின்னணி கலைஞர் டப்பிங் முடிக்கப்படும். அதன்பின்னர்தான் காமெடி நடிகர்கள், மற்றும் துணை நடிகர், நடிகைகளின் டப்பிங் பணி முடிக்கப்படும்
ஆனால் 'விவேகம்' படத்தின் டப்பிங்கில் முதலில் கருணாகரன் கலந்து கொண்டாராம். அதன் பின்னர் துணை நடிகர், நடிகைகள், நாயகிகள் டப்பிங் தற்போது நடைபெற்று வருகிறதாம். இவையெல்லாம் முடிந்தபின்னர் கடைசியாகத்தான் அஜித் டப்பிங் செய்யவுள்ளாராம்.
பல்கேரியாவில் நடந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் அஜித்துக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதால் அவர் முழு ஓய்வில் இருப்பதாகவும், எனவே அவர் கடைசியில் டப்பிங் செய்வார் என்றும் கூறப்படுகிறது.