வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (17:33 IST)

மீண்டும் வெடித்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமர். இருவரும் அவரவர் பாதையில் சினிமாவில் பயணித்துக் கொண்டுள்ளனர். இருவருக்குமே மிகப்பெரிய ரசிகவர் வட்டம் உள்ளது.

தற்போது நடிகர் அஜித்குமார் வலிமை என்ற படத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் போஸன் போஸ்டர் வெளியாகி வைரலாகி சாதனை படைத்தது.

இதேபோல் தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், விஜய் மற்றும் அஜித்குமார் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் வழக்கம் போல் இன்று டுவிட்டர் சண்டை போட்டு வருகின்றனர்.

அதில், MrPerfectVijay Vijay  என்ற ஹேஸ்டேக்கை  விஜய் ரசிகர்களும், HonestTaxPayerThalaAjith என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்களும் உருவாக்கி டுவிட்டரில் இரு நடிகர்களின் ரசிகர்களும் சண்டையிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்டிங் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.