1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (13:30 IST)

அஜித்தின் அசத்தல் குடும்ப புகைப்படம்.. ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவு..!

ajith shalini
அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அசத்தல் புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 
 
அஜீத் அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளிநாடு செல்வார் என்பதும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஷாலினி அஜீத் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய நிலையில் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். 
 
அந்த வகையில் அஜீத், ஷாலினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்  ஷாலினியின் இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva