புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:24 IST)

தயாரிப்பாளரின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அஜித்?

அஜித் தான் தயாரிக்கும் இன்னொரு படத்தில் நடிப்பார் என்கிற தயாரிப்பாளரின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
சிவா – அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘விவேகம்’. 80 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 30 கோடிக்கும் மேல் நஷ்டம். ’10 கோடி போனாப்போகுது. மீதம் 20 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுங்க’ என தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனை நெருக்குகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அத்துடன், ‘நீங்க தரலேன்னா நாங்க அடுத்து அஜித் வீட்டுக்குத்தான் போகப்போறோம்’ என்று குண்டை தூக்கிப்போட, அதிர்ந்து போயுள்ளார் தியாகராஜன். ‘அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. எப்படி ஏ.எம்.ரத்னத்துக்கு ‘ஆரம்பம்’ ஃபிளாப் ஆனதுனால ‘விவேகம்’ மாதிரி கமர்ஷியல் ஹிட் கொடுத்து இழப்பை சரி கட்டினாரோ… அதுபோல எனக்கும் ஒரு கமர்ஷியம் படம் பண்ணித்தர கேட்டிருக்கேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க. குட்டையைக் குழப்பி காரியத்தைக் கெடுத்துடாதீங்க’ என்று கெஞ்சிக் கேட்டுள்ளாராம். அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அஜித்?