63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!
63 வயதாகும் பிரபல நடிகரின் மனைவி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக சற்றுமுன் புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வெங்கஷ்க்கு 63 வயதாகும் நிலையில் 34 வயது ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய மனைவியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனில் ரவிபுடி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த படத்தின் சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva