செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (15:38 IST)

ரஜினி மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதி! – காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா. இவருக்கு நடிகர் தனுஷுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் தம்பதியர் தாங்கள் விவகாரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று உடல்நலக் கோளாறு காரணமாக ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தார். இந்நிலையில் தற்போது காய்ச்சல், தலைசுற்றல் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, தான் நலமுடன் இருப்பதாக மருத்துவருடன் எடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.