அம்மாவுடன் ஆட்டம் போடும் ஐலா பாப்பா - அழகிய வீடியோ!

Papiksha Joseph| Last Updated: சனி, 19 ஜூன் 2021 (13:45 IST)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

அவ்வப்போது மகளின் கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆல்யா மானசா தற்போது தனது மகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கியூட்டான கமெண்ட்ஸிற்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...


இதில் மேலும் படிக்கவும் :