1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:18 IST)

மலேசியாவில் மற்றுமொரு ரஜினி படம்

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் மற்றுமொரு ரஜினி படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது.


 

 
ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. 24 ஏஎம் ஸ்டியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் கிராமத்தை செட் போட்டு இத்தனை நாட்களாகப் படம்பிடித்து வந்தனர்.

இங்கு ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்ததாக மலேசியா சென்றுள்ளனர். பயங்கரமான ஆக்ஷன் சேஸிங் காட்சிகளை அங்கு எடுக்கப் போகிறார்களாம். இந்தப் படத்தின் தலைப்பான ‘வேலைக்காரன்’, ரஜினி நடித்த படங்களில் ஒன்று. அப்போ, இதுவும் ரஜினி படம்தானே?