திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (11:07 IST)

மீண்டும் சினிமா எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜ்

‘கோகோ மாக்கோ’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு சர்கார் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறுகையில்,


 
‘‘சர்கார் பட பிரச்சினையில் பலருக்கு மனப்புழுக்கம் இருந்தது. இதனால் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்தேன். மீண்டும் அந்த பதவியில் தொடருமாறு பலரும் வற்புறுத்தினர். 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். நான் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
 
தேர்தல் நடத்துவது சரியாக படவில்லை. எனவே ராஜினாமாவை வாபஸ் பெற்று மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. நிறையபேர் தங்கள் கதைகளை பதிவு செய்கிறார்கள்.’’ என்றார்.