1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (23:50 IST)

ரேவதியை அடுத்து குட்டி ரேவதி: பிரசன்னாவின் பிளான் பலிக்குமா?

தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தில் ராஜ்கிரணுடன் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பிரசன்னா மற்றும் ரேவதி. சீனியர் நடிகை ரேவதியுடன் நடித்த சந்தோஷத்தில் இருக்கும் பிரசன்னாவுக்கு தற்போது குட்டி ரேவதியுடன் கைகோர்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.





ஆம் பிரபல பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கவுள்ள ஒரு படத்தில் பிரசன்னாதான் ஹீரோ. அதுவும் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்\

ஐபிஎஸ் முடித்துவிட்டு பணியில் சேர்ந்த முதல் நாளே ஒரு மிக முக்கிய வழக்கை கையில் எடுத்து அதை எப்படி டீல் செய்கிறார் என்பதுதான் கதையாம். இந்த படத்திற்கு பின்னர் ஆக்சன் ஹீரோவாக மாற வேண்டும் என்பது பிரசன்னாவின் பிளானாம்.

பிரபல பத்திரிகையாளர் பரிதியுடன் இணைந்து வசனம் எழுதி இயக்கவுள்ள குட்டி ரேவதி இந்த படம் நிச்சயம் நமது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.