கேரளா: கபாலி, பாகுபலி 2 படங்களை அடுத்து 3வது இடத்தை பிடித்த 'விவேகம்'


sivalingam| Last Modified திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (07:40 IST)
தமிழ் திரைப்படங்கள் தற்போது அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் நல்ல வசூலை கொடுத்து கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் வரும் வியாழன் அன்று ரிலீஸ் ஆகும் விவேகம்' திரைப்படம் கேரளாவில் புதிய சாதனை படைக்கின்றது.


 
 
ஆகஸ்ட் 24ஆம் தேதி கேரளாவில் இந்த படம் 1000 காட்சிகள் திரையிடப்படுகிறது. அஜித் படம் ஒன்று இவ்வளவு அதிக காட்சிகள் கேரளாவில் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை; இதற்கு முன்னர் கபாலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாளில் 1000 காட்சிகள் திரையிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் விவேகம் படமும் மூன்றாவதாக இணைந்துள்ளது.
 
மேலும் 'பாகுபலி 2' படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்த நிறுவனமே 'விவேகம்' படத்தையும் ரிலீஸ் செய்வதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் எந்தவித பிரச்சனையும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :