ஜிபி முத்துவை அடுத்து இன்னொரு போட்டியாளரும் வெளியேற விருப்பம்: பிக்பாஸ் அனுமதிப்பாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜிபி முத்து வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஜிபி முத்து தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் அதனால் தன்னை வெளியேற்றும்படி பிக்பாஸ் மட்டும் கமல்ஹாசனிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுமதிக்கப்பட்டார்
இந்த நிலையில் ஜி பி முத்துவை அடுத்து விஜே மகேஸ்வரியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் இதற்கு சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என ஏற்கனவே என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற விருப்பம் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva