மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் காற்று வெளியிடை ஹீரோயின்....


Murugan| Last Modified புதன், 17 மே 2017 (15:10 IST)
இயக்குனர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த நடிகை அதிதி ராவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

 
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அதிதி ராவ். இந்த படம் வெளியானதும், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கு வாய்ப்பு குவியும் என்ற கனவில் இருந்தாராம். தனக்கென தனி மேனேஜர் மற்றும் சென்னையில் வீடு என்ற கனவில் இருந்தவருக்கு, படத்தில் ரிசல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இவரை ஒப்பந்தம் செய்ய எந்த தயாரிப்பாளரும் வராத நிலையில், காத்திருந்து காத்திருந்து கடுப்பான நடிகை, தற்போது மும்பைக்கே மூட்டை கட்டி விட்டார் என செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் இவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.  இந்த படத்தில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். 
 
காற்று வெளியிடை படத்தில் சிறப்பாக நடித்திருந்ததால், அதிதி ராவை மீண்டும் மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியாவது தமிழில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் அதிதி ராவ்.


இதில் மேலும் படிக்கவும் :