1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (12:20 IST)

மறுபடியும் அனிமேஷன் பட்டி டிங்கரிங்; ஆதிபுருஷ் ரிலீஸ் எப்போது?

adipurush
பிரபாஸ் நடித்து பேன் இந்தியா படமாக வெளியாகவுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மாற்றியமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதன் கிராபிக்ஸ் அனிமேஷன் நன்றாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 2023 பொங்கலில் படத்தை வெளியிட ஆதிபுருஷ் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த சமயம் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால் கோடை விடுமுறை சமயத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.


இதற்கிடையே படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ரூ.100 கோடி செலவில் மறுவேலை செய்து தயார் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஜூன் 16ம் தேதி ஆதிபுருஷ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K