புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (15:34 IST)

டூப் போட்டும் ரிஸ்க் எடுத்த அதர்வா

சைக்கிள் சண்டைக் காட்சிக்காக, அதர்வா ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்கிறார்கள்.
 

 


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. விஜய் சேதுபதி, நயன்தாராவின் கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், நயனின் தம்பியாக நடித்துள்ளார் அதர்வா. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் சைக்கிள் சண்டை, சமீபத்தில் பெங்களூரில் படமாக்கப்பட்டது. ஸ்டன்ட் சில்வா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ ஹான் யு இருவரும் சேர்ந்து அதைப் படமாக்கியுள்ளனர். தெற்காசியாவிலேயே நம்பர் 1 சைக்கிஸ் ஸ்டன்ட் மாஸ்டர் இந்த லீ ஹான் யு.  இந்த சண்டையில், வீலிங் போன்ற காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அதர்வா. அவரால் முடியாத சில படுபயங்கர காட்சிகளில், லீ ஹான் அதர்வாவுக்கு டூப் போட்டு நடித்துள்ளார். படத்தில் மூன்று நிமிடங்களே இடம்பெறும் இந்தக் காட்சியை, 5 நாட்களில் படமாக்கியிருக்கின்றனர்.