பாலா - அதர்வா - சற்குணம் ... உருவாகும் புதிய கூட்டணி

Geetha Priya| Last Updated: சனி, 17 மே 2014 (12:13 IST)
களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சற்குணத்துக்கு நய்யாண்டி பெரும் பின்னடைவாக அமைந்தது. மலையாளத்தில் பல வருடங்கள் முன்பு வெளியான, மேலே பறம்பில் ஆண் வீடு படத்தின் தழுவல்தான் நய்யாண்டி. இந்த மலையாளப் படத்தை ஏற்கனவே தமிழில் வள்ளி வரப்போறா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.
ஏற்கனவே அடித்து துவைத்த கதையை சற்குணம் படமாக்கியது முதல் சறுக்கல். காட்சிகளின் சுவாரஸியமின்மை இரண்டாவது மைனஸ். படத்தின் நாயகி நஸ்ரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் சர்ச்சையும் மூன்றாவது பலவீனம். எல்லாமும் சேர்ந்து சற்குணம் இரண்டு படங்களில் சம்பாதித்த நற்பெயரை காலாவதியாக்கின.
 


இதில் மேலும் படிக்கவும் :