செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (14:34 IST)

மீண்டும் கைகோர்க்கும் அடங்கமறு கூட்டணி..!

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் எதுவும் நடக்காத நிலையில் கடைசியாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இப்போது அந்த படமும் அடுத்த கட்டத்துக்கு செல்லாத நிலையில் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை அடங்கமறு படத்தை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.