1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (11:58 IST)

பப்பி குட்டிக்கு ஹேப்பி பர்த்டே... செல்லப்பிராணியுடன் கியூட்டான போட்டோ ஷூட் நடத்திய அஞ்சலி!

நடிகை அஞ்சலி தான் வளர்க்கும் நை குட்டியின் பிறந்தநாளுக்கு வித்யசமான வாழ்த்து கூறி லைக்ஸ் அள்ளியுள்ளார்!
 
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. 
 
பின்னர் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே காதலன் ஜெய்யை பிரிந்துவிட்டார். இந்நிலையில் தான் வளர்க்கும் நாய் குட்டியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அத்துடன் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
அந்த பதிவில், " என் உடலுக்கு வெளியே துடிக்கும் என் இதயத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் சிறிய மற்றும் விலைமதிப்பற்ற போலோ.. நீங்கள் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறீர்கள், இப்போது போலோவுக்கு முன்னும் பின்னும் என் வாழ்க்கையை நான் வரையறுக்க வேண்டும். லவ் யூ லாட்ஸ். என கூறி வாழ்த்தியுள்ளார்.