பிக் பாஸ்: நடிகை சினேகா, ரம்பா, சதா எண்ட்ரி??


Sugapriya Prakash| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (15:27 IST)
பாலிவுட்டில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் தற்போது கோலிவுட் டோலிவுட்டிலும் காணப்படுகிறது.

 
 
தமிழில் உலக நாயகன் கமல் தொகுத்து வரும் இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. வெற்றிகரமாக மூன்று வாரத்தை கடந்தாலும் நிகழ்ச்சியில் பல சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
 
இந்நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் நாளை (16.07.2017) முதல் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கின் பிரபல தொலைக்காட்சியான ஸ்டார் மா இதனை ஒளிபரப்புவுள்ளது.
 
இதுவரை இந்த நிகழ்ச்சியில் யார் யார் பக்கேற்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், இதில் தமிழ் நாயகிகளான சினேகா, ரம்பா மற்றும் சதா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.
 
சினேகா தற்போது தெலுங்கு படங்களில் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சதா தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :