நடிகை ரூபிணியின் தாயார் மரணம்

Sasikala| Last Modified புதன், 17 மே 2017 (16:00 IST)
திரைப்பட நடிகை ரூபிணி மும்பையை சேர்ந்தவர் ஆவார். 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை  ரூபிணியின் தாயார் இன்று மும்பையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர்,  விஜயகாந்த்தின் கூலிக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரூபிணி. கடைசியாக ‘தாமரை’ என்ற தமிழ்ப்  படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார்.
 
விஜயகாந்தின் கூலிக்காரன், புலன் விசாரணை, ரஜினியின் - மனிதன், கமல்ஹாசனுடன் மைக்கல் மதன காமராஜன், சத்யராஜுடன் புதிய வானம் படம் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :