கிளாமர் லுக்கில் ரெஜினா கஸாண்ட்ராவின் லேட்டஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அப்படி இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.