திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:16 IST)

ஹேப்பி பர்த்டே ராஜமாதா… உங்களுக்கும் இன்னும் வயசே ஆகல!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

நடிகைகளுக்கு எப்போதுமே கதாநாயகியாக நடிக்கும் காலத்தில்தான் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும். அதன் பின்னர் மார்க்கெட் போன பின்னர் அம்மா அண்ணி என்ற கொத்தமல்லி கதாபாத்திரங்களில் நடித்து பிழைப்பை ஓட்டுவர். ஆனால் ஒரு சிலருக்குதான் கதாநாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களும் சிறப்பாக எடுபடும்.
படையப்பா படத்தின் நீலாம்பரி வேடமாகட்டும், பாகுபலி படத்தின் ராஜமாத சிவகாமி தேவி ஆகட்டும், சூப்பர் டீலக்ஸ் படத்தின் அம்மா வேடமாகட்டும் எல்லா வேடங்களையும் ஈசியாக போகிற போக்கில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைக் குவிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன். இன்று அவர் தனது 53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். படையப்பா படத்தில் ரஜினியைப் பார்த்து அவர் சொல்லும் வசனமே அவருக்கும் பொருந்தும் ’வயசானாலும் உன் ஸ்டைலும் இளமையும் இன்னும் ஒன்ன விட்டு போகவே இல்லை’