1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (09:45 IST)

“என்ன சொன்னாலும் குறை கண்டுபிடிக்கிறார்கள்…” பிரியங்கா சோப்ரா வேதனை!

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் மேடையில் இந்தியா சார்பாக சிறந்த பாடலுக்காக கலந்துகொண்ட RRR ஒரு பாலிவுட் படம் என சொல்லப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. இந்தியாவில் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆனாலும், RRR ஒரு தெலுங்கு படம்தான். மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.

பின்னர் இதுபற்றி பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது இதுபற்றி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் “RRR பாலிவுட் படம் இல்லை. ஒரு தமிழ்ப் படம்” என தவறாகக் கூறினார். இது இப்போது இணையத்தில் இப்போது ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளது.

இந்த ட்ரோல்களுக்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார் பிரியங்கா “அதில் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கிறார்கள். முன்பெல்லாம் நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்வேன். ஆனால் இப்போது எதை சொன்னாலும், யோசித்து பேசவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு வந்துவிட்டது. உயரம் செல்ல செல்ல விழுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.