1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (21:01 IST)

என் அழகை மெருகேற்றும் விதமாக இது உள்ளது: பூஜா ஹெக்டே!

திரையுலகில் இருக்கும் சில நட்சத்திரங்கள் சில விஷயங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அது உணவாகட்டும், உடையாகட்டும், பழக்க வழக்கமாகட்டும் ஏதோ ஒரு விஷயத்தில் அடிமையாகத்தான் உள்ளனர். 
 
அந்த வகையில், முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஒரு விஷயத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும் அதை தவிர்க்க முடியவில்லை என்றும் கூறுகிறார். அவர் கூறியது பின்வருமாறு...
 
என்னை அடிமையாக்கியது கூலிங்கிளாஸ். என் வீட்டில் அடுக்கடுக்காக கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறேன். எப்போது ஷாப்பிங் சென்றாலும் கூலிங்கிளாஸ் வாங்கத் தவறமாட்டேன். 
 
என் வீட்டில் உள்ளவர்கள் கூட எதற்காக இவ்வளவு கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறாய் என்று கிண்டல் செய்வார்கள். ஆனால் என்னால் அதை கட்டுப்படுத்தமுடியவில்லை. என் அழகை மெருகேற்றி காட்டும் விதமாக கூலிங்கிளாஸ் உள்ளது என தெரிவித்துள்ளார்.