ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மே 2024 (07:40 IST)

என் திருமணத்தைப் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்?... விஜய் பட நடிகை கேள்வி!

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன. இவரின் கிளாமர் புகைப்படங்களுக்குக் கிடைக்கும் ஆதரவைப் போலவே விமர்சனங்களும் அதிகளவில் எழுந்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசிய மாளவிகா மோகனன் “என் திருமணத்தைப் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்?.. எனக்குக் கிளாமரான உடைகள் பிடிக்கும் அதனால் அந்த மாதிரி உடைகளை அணிகிறேன்” எனக் கூறியுள்ளார்.