வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:45 IST)

கனகாவின் ஒரே ஆசை இதுதானாம்… நேரில் சந்தித்த குட்டி பத்மினி பகிர்ந்த தகவல்!

கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். கரகாட்டகாரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பிரபு ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்தார். 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.

தேவிகா  கதாநாயகியாக   நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது அம்மாவின்  பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லையாம்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி கனகாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து, அவரோடு புகைப்படம் எடுத்து அதை வெளியில் பகிர்ந்துள்ளார். அதில் காணப்படும் கனகா, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் காணப்படுகிறார். பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் குட்டி பத்மினி இப்போது ஒரு நேர்காணலில் கனகாவுடனான தனது சந்திப்பு குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் கனகாவை எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென அவர் வீட்டுக்கு வெளியே 2 மணிநேரம் காத்திருந்தேன். அப்போது அவர் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினார். அவரை அழைத்துக்கொண்டு ஒரு காபி ஷாப்புக்கு சென்றேன். அங்கே அவர் மனம் விட்டு பேசினார்.

இப்போது அவரும் அவருடைய தந்தையும் சமாதானம் ஆகிவிட்டதாகக் கூறினார். ஆளுக்கு ஒரு வீடு என பிரித்துக்கொண்டு வாழ்வதாகக் கூறினார். மேலும் தன்னுடைய இடம் ஒன்று அரசு ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை மட்டும் மீட்டுத் தாருங்கள் என என்னிடம் கூறினார். நான் இப்போது இருக்கும் அரசு நமக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் என சொல்லிவிட்டு அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.