செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:45 IST)

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். கரகாட்டகாரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பிரபு ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்தார். 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.

தேவிகா  கதாநாயகியாக   நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது அம்மாவின்  பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லையாம்.

அவரை தொடர்புகொள்ள முயன்றும் தன்னிடம் பேசவில்லை என அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இந்நிலையில் கனகா இப்போது ஒரு காஃபி ஷாப்பில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாதபடி உடல் எடை அதிகமாகி முக தோற்றம் மாறிக் காணப்படுகிறார்.