வியாழன், 2 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (14:43 IST)

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷுட் ஆல்பம்!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷுட் ஆல்பம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து இதுவரை காஜல் தனது குழந்தையின் முகம் தெரியாதவாறு இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் முதல் முறையாக குழந்தையின் முகம் தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டே சினிமாவிலும் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள காஜல் அகர்வால், தனது புத்தம் புதிய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.