1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:36 IST)

பிரபல சீரியலில் இருந்து விலகிய வில்லி நடிகை - அவருக்கு பதில் இனி இவர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகையாக நடித்து பிரபலபலமானவர் நடிகை பரீனா. பாரதியுடன் தகாத உறவில் இருப்பதால் அவரை மக்கள் திட்டி தீர்த்துவிமர்சித்து தள்ளிவார்கள். 
 
கர்ப்பமாக இருந்த அவருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட அபி டெய்லர் தொடரில் நடித்து வந்தார்.
 
இந்நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இனி பரீனாவாக பவானி வேடத்தில் நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார்.கீர்த்தி ராஜபார்வை தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.