சூட்கேசில் குண்டு துளைக்காத ஜட்டி வைத்திருக்கிறேன் - நடிகர் விஷால்


Murugan| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (16:06 IST)
நடிகர் விஷால் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

 

 
அப்போது பல பல சுவாரஸ்யமான கேள்விகளை ரசிகர்களை கேட்டனர். அதற்கு அவரும் சுவாரஸ்யமாகவே பதிலளித்தார்.
 
கேள்வி - நடிகர் விஜயுடன் நண்பர், சகோதரர், வில்லன்  என கதாபாத்திரம் வந்தால் எதில் நடிப்பீர்கள்?
 
பதில் - வில்லன்
 
கேள்வி - நடிகர் அஜீத் பற்றி கூறுங்கள்...அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
 
பதில் - கண்டிப்பாக... அவர் திறந்த மனம் உள்ளவர்
 
அப்போது, நடிகரும், விஷாலின் நண்பருமான ஆர்யா ஒரு கேள்வி எழுப்பினார்.
 
கேள்வி - உன்னுடைய சூட்கேசில் என்ன இருக்கிறது. A) எக்ஸ்ட்ரா புல்லட் B) பழைய 500/1000 ரூபாய் நோட்டுகள் C) பயன்படுத்திய ஜட்டி
 
பதில் - குண்டு துளைக்காத ஜட்டி மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் மச்சி... என அவர் குறும்பாக பதில் அளித்தார்.
இதில் மேலும் படிக்கவும் :