திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:44 IST)

நடிகர் விக்ரமிற்கு கொரொனா தொற்று - வேதனையில் ரசிகர்கள்!

கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதித்து பலியாக்கியது. தொடர்ந்து இந்த நோயால் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்படுவதும் ,அதற்கு சிகிச்சை எடுத்து குணமாவதும் சிலர் அந்நோயில் இருந்து மீள முடியாமல் மரணிப்பதுமாக இருந்த்து வருகின்றனர். 
 
சாதரண மக்கள் முதல் பெரிய செலபிரிட்டி, பிசினஸ் மேன், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானவ்ர் இநோயால் பாதிக்கப்பட்டதை பார்த்தோம். அண்மையில் கூட நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தார். 
 
இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆம், பிரபல நடிகர் விக்ரம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அவர் வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் கூறுகிறது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.