செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (19:58 IST)

நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

சமீபத்தில் லண்டனில் இருந்து தமிழகம் வந்த நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இ ந் நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை  நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கொரொனாவால் பாதிக்கபட்டுள்ள வடிவேலு அத்தொற்றில் இருந்து மீண்டு வரும் நிலையில், வடிவேலு  நலமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.