பிரபல நடிகர் ஐசியு வில் அனுமதி – திரையுலகினர் அதிர்ச்சி !

Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (08:52 IST)
பிரபல குணசித்திர நடிகரான தென்னவன் மூளை முடக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான என்னுயிர்த்தோழன் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் தென்னவன். அதன் பின்னர் விருமாண்டி, ஜெமினி, சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளை முடக்கம் ஏற்பட்டு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :