திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (10:15 IST)

நடிகர் தாடி பாலாஜி மீது காதல் மனைவி போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் தாடி பாலாஜி மீது காதல் மனைவி போலீசில் பரபரப்பு புகார்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது காதல் மனைவி நித்யா மாதவரம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். நடிகர் பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார்.


 
 
நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது.
 
சமீபத்தில் இவர்கள் இருவரும் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.
 
இந்நிலையில் நித்யா தனது கணவர் தாடி பாலாஜி மீது மாதவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.