1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (20:10 IST)

தன்னுடன் நடித்த ஹீரோயினை விட அதிகமாக வெட்கபட்ட சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிக்கும் போது தன்னுடன் நடிக்க ஹீரோயினை விட அதிகளவில் வெகப்பட்டதாக கூறப்படுகிறது.


 

 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான சூர்யா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை. இருந்தாலும் போராடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர். தற்போது இவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் இவரை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அறிமுகம் படமான நேருக்கு நேர் படத்தில் ஹீரோயின் சிம்ரனை விட சூர்யா அதிகளவில் வெட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாடல் காட்சிகளில் சிம்ரன் சூர்யாவை நெருங்கும்போது அப்படியே வெட்கப்படுவாராம்.