திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (11:23 IST)

இயக்குனர் அமீருக்கு எதிராக போஸ்டர்… களமிறங்கும் சூர்யா ரசிகர்கள்.. பிரச்சனை முடியாது போலயே!

கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.

அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார். மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது பிரச்சனையில் சூர்யா ரசிகர்கள் இறங்கி அமீரையும் அவரின் ஆதரவாளர்களையும் மோசமான வார்த்தைகளில் தாக்கும் வார்த்தைகள் அடங்கிய போஸ்டர் ஒன்றை சமூகவலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.