விஷாலின் எண்ணத்தை வரவேற்கிறேன்: நடிகர் சரத்குமார்

K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 29 மே 2015 (08:47 IST)
தென்னிந்திய நடிகர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலின் எண்ணத்தை தான் வரவேற்பதாக நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 
இது குறித்து சென்னையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவது குறித்து, சங்கத்தின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. 
 
அதன்படி, கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய சிலருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
 
கட்டடப் பணிகள் தொடங்காததற்கு காரணம் என்னவென்றால், நீதிமன்றத்தில் பூச்சி முருகன் தொடர்ந்த வழக்குதான் என்பதைச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அறிந்த செய்திதான்.
 
கட்டட விவகாரத்தில் ஆர்வமுடன் இருக்கும் விஷாலின் எண்ணத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், கட்டடம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால், அது எங்களின் லட்சியம்.
 
சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு ஆதரவான விஷாலின் போராட்டத்தில் என்ன நியாயம் உள்ளது?  எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை சங்கத்தில் மட்டுமே பேசித் தீர்க்க வேண்டும்.
 
ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவது குறித்து பிரச்னை இருப்பது போலவே, அவ்வப்போது பேட்டி கொடுத்து உண்மைக்கு மாறாக பேசி வருவது வேதனை அளிக்கிறது.
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :