1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:01 IST)

நடிகர் தவசியை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய ரோபோ சங்கர்!

நடிகர் தவசியை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய ரோபோ சங்கர்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடித்த தவசி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பார்த்த நடிகர்கள் பலர் அவரது சிகிச்சைக்கு உதவி செய்ய முன்வந்தனர்
 
விஜய்சேதுபதி ஒரு லட்சம், சிம்பு ஒரு லட்சம், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம், சூரி 20 ஆயிரம் என நடிகர் தவசிக்கு நிதி உதவி குவிந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தவசி இடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் குணமாக வாழ்த்து தெரிவித்ததோடு அவரது வங்கி கணக்கு எண்ணையும் வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அவரது தரப்பில் இருந்து ஒரு பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் பண்ணப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். இது ஒரு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த மீசையை நாங்கல் மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ரோபோ சங்கர் தவசியிடம் தெரிவித்தார்.