சினிமாவில் களம் இறங்கும் ரகுமானின் மகள்....
நடிகர் ரகுமானின் மகள் விரைவில் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பார் எனத் தெரிகிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ரகுமான். சமீபத்தில் கூட இவர் நடித்திருந்த ‘துருவங்கள் பதினாறு’ பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் பெயர் ருஷ்தா. இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறதாம். இவர், நடிகர் துல்கர் சல்மானின் தீவிர ரசிகை என்பதால், அவருடன் ஜோடி சேர்க்கும் வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது.