திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:50 IST)

வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு இவ்வளவு சம்பளமா?

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். இப்போது தமிழில் வுல்ஃப் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு இந்தி நடிகரும் இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா கதாநாயகனாக நடிக்கும் பட்டாஸ் ரவிக்குமார் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபுதேவா தன் சினிமா கேரியரில் இதுவரை வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக பிரபுதேவாவிற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.