செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:15 IST)

மயில்சாமி இறந்தும் ஓயாமல் பேசப்பட காரணம்... பார்த்தீபன் ட்வீட்!

பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.
 
மேலும், நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம், காஞ்சனா, வீரம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
 
இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளது. அந்தவகையில் நடிகர் பார்த்தீபன் மயில்சாமி மறைவு குறித்து பதிவுட்டுள்ளார். 
 
அதில்,  " நேற்று காலை மரணமடைந்த பின் தான் நேற்று மாலை பிறந்தது!நேற்று மாலை மரணமடைந்த பின் தான் இன்று காலை பிறந்தது. ஆனால் நேற்று காலை மரணமடைந்த நண்பர் மயில்சாமி இன்று வரை ஓயாமல் பேசப்பட காரணம்… என்னுடைய ஆர் பார்த்திபன் மனித நேய மன்றத்தின் குறிக்கோளே ‘இன்னொரு மனிதன் இருக்கும் வரை யாருமே இங்கு அனாதையில்லை’அந்த இன்னொரு மனிதனாய் அவர் இருந்ததுதான்!