வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (10:23 IST)

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் திரையுலகம்!

Actor Marimuthu
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிமுத்து திடீரென மாரடைப்பால் இறந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக சில படங்கள் இயக்கி, பல படங்களில் நடித்தும் உள்ளவர் மாரிமுத்து. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்திலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு சீரியல் ரசிகர்கள் ஏராளம். 57 வயதாகும் மாரிமுத்துவுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவரது இந்த திடீர் மறைவு திரைத்துரையினரையும், சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Edit by Prasanth.K