1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (08:42 IST)

இயக்குனரை உருவகேலி செய்த மம்மூட்டி… மன்னிப்பு கேட்டு வருத்தம்!

இயக்குனர் ஒருவரை விளையாட்டாக மம்மூட்டி பேசியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர் மன்னிப்புக் கேட்டு கொண்டுள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 70 வயதுக்கும் மேலும் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2018 என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் படத்தின் இயக்குனர் பற்றி பேசிய போது “அவருக்கு தலையில் முடி இல்லை என்றாலும், உள்ளே மூளை இருக்கிறது” எனப் பேசி இருந்தார்.

இது பாடிஷேமிங் செய்வது போல உள்ளது என கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் இதுபோல எதுவும் நடக்காது எனவும் கூறியுள்ளார்.