96 பட இயக்குனரின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் சூர்யா… ஹீரோ யார் தெரியுமா?
சூர்யா கார்த்தி கூட்டணியில் ஏற்கனவே கடைகுட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன.
சூர்யா தன்னுடைய 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்துக்காக கார்த்தி ஏற்கனவே விருமன் மற்றும் கடைகுட்டி சிங்கம் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது மூன்றாவதாக ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை 96 பட புகழ் பிரேம்குமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு ஜல்லிக்கட்டு என்று பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
கார்த்தி இப்போது ஜப்பான் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து நலன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.