1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (13:12 IST)

நடிகர் சங்க புது கட்டிடம் கட்ட 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா!

நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. இதில் பொதுச் செயலாலர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு  சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும்  என்று அறிவித்தனர்.

 
அதன்படி வருகிற 31 ஆம் தேதி சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவது. விழாவுக்கு நடிகர் கமல், ரஜினியை  அழைப்பது உள்ளிட்ட சங்கம் கட்டடம் தொடர்பான பல தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டன.
 
கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட  நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு  செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம்  மற்றும் அலுவலகங்கள் போன்றவையும் இங்கு கட்டப்பட உள்ளது.
 
நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான  பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.