செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:39 IST)

நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,   அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.

 
இதனை தொடர்ந்து ஒரு நாள் உண்ணாவிரதமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், அன்றைய  தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என்றும் நடிகர் சங்க துணை  தலைவர் பொன்வண்ணன் அறிவித்துருந்தார்.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ள நடிகர் சங்கத்திற்கு மாணவ  புரட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் ஆர்பாட்டத்தில்  புரட்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்க உள்ள நடிகர்  சங்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இதையடுத்து #SayNoToNadigarSangam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி இருக்கிறது.
 
எதிர்ப்பு தேவையில்லாமல் மீடியா வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர் சங்கத்திற்கு  கண்டனங்கள் வலுத்து பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
 
அவற்றில் சில....