1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:32 IST)

மார்க்கெட் டல்: சீரியலுக்கு தாவிய ஆர்யா!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ப்ளே பாய்யாக வளம் வந்தார். அனைத்து நடிகைகளுக்கும் பிடித்த நடிகராய் இருந்தார். அத்தோடு பல படங்களில் நடித்ததோடு, பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். 

ஆனால், இதனை அடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்களில் சில படுதோல்வி அடைந்தது. இதனால், நஷ்டம் அடைந்தார். அதோடு அடுத்த பட வாய்ப்பின்றி தவித்தார். தற்போது கஜினிகாந்த் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
 
இதற்கு பல பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தது. அதில் 16 பெண்களை தேர்வு செய்திருக்கிறாராம். அவர்களை வைத்து ஒரு சீரியல் எடுக்க போகிறார்களாம். அந்த சீரியலில் நாயகனாகவும் நடிக்கிறாராம். இந்த சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்.