வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:41 IST)

இடைவெளிக்குப் பிறகு அடுத்த பட வேலைகளை தொடங்கிய அமீர் கான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் இந்த ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2024 ல் தொடங்க உள்ளதாகவும், 2024 கிறிஸ்துமஸில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.